முத்துப்பேட்டை பகுதியை சேர்ந்த இரு இளைஞர்கள் நேற்று முன்தினம் இரவு ஒரு பைக்கில் பங்களாவாசல் அருகே சென்றுக்கொண்டிருந்தனர்.
அப்பொழுது பட்டுக்கோட்டையிலிருந்து நாகப்பட்டினம் செல்லும் அரசு பேருந்து ஒன்று இளைஞர்கள் சென்ற பைக்கில் மோதுவது போல் சென்று உள்ளது.
இதில் நிலை தடுமாறி போன இரு இளைஞர் அதிஷ்டவசமாக உயிர் தப்பி பைக்கை நிறுத்தினர்.
இதனைக்கண்ட இளைஞர்கள் மற்றும் அவர்களுக்கு ஆதரவாக அவரது மற்ற நண்பர்கள், நிறுத்தாமல் சென்ற அந்த அரசு பேருந்தை புதிய பேருந்து நிலையத்தில் வழி மறைத்து மடக்கி சிறை பிடித்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பும் பதற்றமும் ஏற்ப்பட்டது.
தகவல் அறிந்ததும் சம்பவ இடத்திற்கு முத்துப்பேட்டை இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார் அங்கு குவிக்கப்பட்டனர்.
பின்னர் அரசு பேருந்தை சிறைபிடித்த இளைஞர்களிடம் போலீசார் பேச்சு வார்த்தை நடத்தி அவர்களை அங்கிருந்து கலைத்தனர். பின்னர் சுமார் 1 மணிநேரத்திற்கு பிறகு அந்த பேருந்து அங்கிருந்து புறப்பட்டு சென்றது.
தகவல் -மு.முகைதீன்பிச்சை முத்துப்பேட்டை.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக