இந்த ஆண்டு ஹஜ் பயணத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி இந்தியர்கள் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதில் ஹஜ் பயணிகளுக்கு உதவு சேவையில் ஈடுபட்டு நெரிசலில் சிக்கி உயிரழந்த
தன்னார்வலரான இந்தியர் நியாசுல் ஹக் பெயரில் ஆண்டுதோறும் விருது வழங்கப்படும் என சவூதி அரேபியாவில் இந்திய தூதரகம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் சவூதி அரேபியாவில் ஹஜ் பயணிகளுக்கு உதவும் வகையில் இந்தியா ஃபெடர்னிட்டி ஃபோரம் என்ற சமூக சேவை அமைப்பை சேர்ந்த தன்னார்வலர்கள் ஏராளாமானோர் செயல்பட்டு வந்தனர்.
இவர்களில் ஹஜ் பயணிகளுக்கு உதவி வந்த இந்தியா ஃபெடர்னிட்டி ஃபோரத்தின் தன்னார்வலரான இந்தியர் ஜார்கண்ட் மாநிலத்தை சேர்ந்த நியாசுல் ஹக் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரழந்தார். சேவையில் ஈடுபட்டு உயிரழந்த நியாசுல் ஹக்கிற்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் இரங்கல் கூட்டம் ஜித்தா இந்திய தூதரகத்தில் நடைபெற்றது.
இந் நிகழ்ச்சியில் பேசிய இந்திய துணைத் தூதர் பி.எஸ்.முபாரக் கூறியதாவது;
நியாசுல் ஹக் மன்சூரி உன்னதமான மிகபெரிய சேவையின் போது உயிரழந்துள்ளார். அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதோடு வரும் ஆண்டுகளில் சிறப்பாக பணியாற்றும் ஹஜ் தன்னார்வலர்களுக்கு மறைந்த நியாசுல் ஹக் மன்சூரி பெயரில் விருதுகள் வழங்கப்படும்' என்றார்.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக