சித்த மருத்துவத்துக்காக பெற்றோருடன் குற்றாலம் வந்த சவுதி நபர் திடீர் மரணம் அடைந்தார்.
சவுதி அரேபியாவைச் சேர்ந்தவர் அல் ஷரானி அப்துல் அஹிஸ் முஹம்மது (47).
ஓய்வுபெற்ற ராணுவ வீரரான இவர், தனது பெற்றோருக்கு சித்தா முறைப்படி சிகிச்சை அளிப்பதற்காக நெல்லை மாவட்டத்தில் உள்ள குற்றாலம் நகருக்கு அழைத்து வந்தார்.
அவர்கள் இங்கு சிகிச்சைபெற்று வந்தபோது அஹிஸ் முஹம்மதுவுக்கு கடந்த 17-ம் தேதி திடீரென்று நெஞ்சுவலி ஏற்பட்டது. இதையடுத்து, தனியார் ஆஸ்பத்திரியில் அவருக்கு ‘ஆஞ்சியோபிளாஸ்ட்’ முறையில் இதயத்தின் ரத்தநாளத்தில் உள்ள அடைப்பை நீக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டது.
எனினும், சிகிச்சை பலனின்றி அல் ஷரானி அப்துல் அஹிஸ் முஹம்மது நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக உயிரிழந்தார். அவரது மரணம் பற்றிய தகவல் சென்னையில் உள்ள சவுதி நாட்டு தூதரகத்துக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரேதப் பரிசோதனை மற்றும் இதர சம்பிரயதாயங்களை நிறைவு செய்தபின்னர் அல் ஷரானி அப்துல் அஹிஸ் முஹம்மதுவின் உடல் சவுதி அரேபியாவுக்கு கொண்டு செல்லப்படவுள்ளதாக அவரது பெற்றோர் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக