திங்கள், 23 நவம்பர், 2015

இலங்கையிலிருந்து முத்துப்பேட்டை திரும்பிய மீனவர்களின் பேட்டி...

முத்துப்பேட்டையில்  கடந்த  வாரம் கன மழை பெய்து வந்தது. இதனால் கடல் சீற்றமும் ஏற்பட்டது. இந்த நிலையில் கடந்த 14-ம் தேதி சனிக்கிழமை மீன் பிடிப்பதற்காக முத்துப்பேட்டை


தெற்குத்தெரு செக்போஸ்ட் அருகே வசிக்கும் சேக்முகம்மது மகன் புரோஸ்கான் (25), அதே போல் திமிலத்தெரு பகுதியில் வசிக்கும் சேக் நூர்தீன் மகன் செல்லவாப்பா என்கின்ற அசரப் அலி (35)  என்ற  இரு  மீனவர்கள் ஒரு படகில்  கோடியக்கரை கடல் பகுதியில் மீன் பிடிக்க சென்றுள்ளனர்.

 3 தினங்களாகியும் வீடு திரும்பாததால்  2 மீனவர்களும் கடல் பகுதியில் தங்கி மீன் பிடித்து  வருவதாக  அவர்களது  பெற்றோர் நினைத்தனர். இந்த நிலையில் மீனவர் புரோஸ்கான் இலங்கையிலிருந்து அங்கு உள்ள ஒரு மீனவரின்  செல்போனிலிருந்து  தனது தந்தை சேக்முகம்மதுக்கு கடந்த 16-ம் தேதி போன் செய்தார்.

 இதில் தான் இலங்கையில் இருப்பதாகவும் மீன் பிடித்துவிட்டு படகில் தூங்கியபோது இரவு நேரத்தில் ஏற்பட்ட கடல் சீற்றத்தின் காரணமாக வழி தவறி இலங்கை சென்று விட்டதாகவும் கூறினார். இதனால் முத்துப்பேட்டையில்  பெரும் பரபரப்பு ஏற்பட்டது. 

இதனையடுத்து  இந்த  தகவல்  கடலோர  காவல்  படைக்கும் தமிழக அரசுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது. இலங்கையில் கரை ஒதுங்கிய 2 மீனவர்களும் இலங்கை மீனவர்களால் கடற்படையினரால் ஒப்படைக்கப்பட்டு இலங்கையில் உள்ள இந்திய தூதுரகத்தில் தங்க வைக்கப்பட்டனர்.

 இதனையடுத்து தமிழக அரசும், இந்திய கடற்படையும் 2 தமிழக மீனவர்களையும்  இந்தியாவுக்கு கொண்டு வர முயற்சி மேற்கொள்ளப்பட்டது. அதன்படி நேற்று முன்தினம் நள்ளிரவு இலங்கை கடற்படையினர் இந்திய கடலோர காவல் படையினர் அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். 

இருவரும் நேற்று அதிகாலை காரைக்கால் துறைமுகத்துக்கு வந்து சேர்ந்தனர். அங்கு காத்திருந்த இரு மீனவர்களின் பெற்றோர்கள் அழைத்து கொண்டு முத்துப்பேட்டை வந்தனர். இந்த நிலையில் நேற்று காலை பொதுமக்கள் சார்பில் 2 மீனவர்களுக்கும் சால்வை அணிவித்து இனிப்பு வழங்கி வரவேற்றார்.

 அது  போல  பொதுமக்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர். இந்த நிகழ்ச்சியில் கூட்டுறவு மீனவர் சங்க தலைவர் இஸ்மாயில், மங்கலூர் ஊராட்சி உறுப்பினர் மன்னர் மன்னன், அ.தி.மு.க மாவட்ட பிரதிநிதி முத்துராமலிங்கம். ஒன்றிய இலக்கிய அணி செயலாளர் தங்கமணி உள்ளிட்டோர் கலந்துக் கொண்டனர்.

 இது குறித்து மீனவர்கள் புரோஸ்கான் மற்றும் அஷ்ரப் அலி ஆகியோர் கூறுகையில்: நடுகடலில் தவித்த எங்களை கடவுள்தான் காப்பாற்றினார். இலங்கையில் கரை ஒதுங்கிய எங்களுக்கு அந்த நாட்டு மீனவர்கள் அதிக உதவி செய்தனர்.

 இலங்கை  அரசும் எங்களை கண்ணியப்படுத்தியது. தமிழக முதல்வர் மற்றும் மீனவத்துறை அதிகாரிகளின் முயற்சியால் இன்று நாங்கள் ஊர் திரும்பி உள்ளோம். 

எங்களுக்காக  முயற்சி மேற்கொண்ட அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றனர். இது குறித்து கூட்டுறவு மீனவர் சங்க தலைவர் இஸ்மாயில் கூறுகையில்: மீனவர்களை மீட்கும் முயற்சியில் நாகப்பட்டினம்  மீனவத்துறை  இணை  இயக்குனரும்  அதே போல்  திருவாரூர்  மீனவர்  துறை  உதவி  இயக்குனரும் அதிக ஆர்வம் காட்டி தமிழக முதல்வரின் முயற்சியால் இன்று  பத்திரமாக  நாடு  திரும்பியுள்ளனர்   என்றார்.


நிருபர்- மு. முகைதீன்பிச்சை முத்துப்பேட்டை


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஃபேஸ்புக்கில் முஸ்லிம்களுக்கு எப்போதும் இடமுண்டு: ஸக்கர்பெர்க்

மத அடிப்படைத் தன்மையைத் தாண்டி அனைவரும் உலவும் இல்லமாக ஃபேஸ்புக் திகழ்கிறது, இங்கு முஸ்லிம்களுக்கு எப்போதுமே இடமுண்டு என்று ஃபேஸ்புக்   ...