ஞாயிறு, 22 நவம்பர், 2015

முத்துப் பேட்டை மீனவர்கள் 2 பேர் இலங்கையிலிருந்து ஊர் திரும்பினர்.


ஆந்திரா, கர்நாடகா சிறைகளில் இருந்து விடுவிக்கப்பட்ட இலங்கையை சேர்ந்த 29 மீனவர்கள் நேற்று அந்நாட்டு கடற்படையிடம் ஒப்படைக்கப்பட்டனர். 


அப்போது திசை மாறி இலங்கையில் கரை ஒதுங்கிய முத்துப் பேட்டை மீனவர்கள்   2 பேர்   இந்திய  கடற்படையிடம்   ஒப்படைக்கப் பட்டனர்.

இலங்கையை சேர்ந்த 5 மீனவர்கள் கடந்த அக்டோபர் 13ம் தேதி வங்கக் கடலில்  மீன் பிடித்துக் கொண்டிருந்த போது காற்றின் வேகத்தால் திசை மாறி ஆந்திர மாநிலம் காக்கி நாடா கடல் பகுதியில் நுழைந்தனர்.

 இதையடுத்து அவர்களை இந்திய கடலோர காவல் படையினர் கைது செய்து காக்கி நாடா  கோர்ட்டில் ஆஜர்  படுத்தி  சிறையில் அடைத்தனர்.

அதே போல் இலங்கையை சேர்ந்த மேலும் 24 மீனவர்கள் கடந்த அக்டோபர் 24ம் தேதி இதே போல திசை மாறி கர்நாடகா மாநிலம் மங்களூர் கடல் பகுதியில் நுழைந்தனர். அவர்களை கடலோர காவல் படையினர் கைது செய்து  கோர்ட்டில் ஆஜர் படுத்தி  சிறையில்  அடைத்தனர். 

இந் நிலையில் இந்திய, இலங்கை  நல்லுறவு அடிப்படையில் 29 மீனவர்களும் நேற்று முன் தினம் விடுதலை செய்யப் பட்டனர். இதையடுத்து நேற்று புதுவை மாநிலம் காரைக்காலில் உள்ள தனியார் துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டனர். 

அங்கிருந்து  இந்திய கடலோர காவல் படை ரோந்து கப்பல் மூலம் பகல் 11.30 மணியளவில் இந்திய- இலங்கை கடல் எல்லையில் இலங்கை கடற் படையினரிடம்  29  மீனவர்களையும்  ஒப்படைத்தனர்.

இந் நிலையில் கடந்த 16ம் தேதி திருவாரூர் மாவட்டம் முத்துப் பேட்டையை சேர்ந்த செல்லவாப்பா என்கிற அஷரப் அலி (35),  புரோஷ்கான் (25) ஆகிய 2 பேர்  கடலில்  மீன் பிடித்த போது திசை மாறி இலங்கையில் கரை ஒதுங்கினர்.

 நேற்று  இலங்கை  மீனவர்கள் ஒப்படைக்கப்பட்ட போது இவர்கள் 2 பேரையும் இலங்கை கடற்படையினர் இந்திய கடலோர காவல் படை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். 

அவர்கள் நேற்றிரவு காரைக்கால் வந்து சேர்ந்தனர். அவர்களை உறவினர்கள் முத்துப்பேட்டைக்கு  அழைத்து  சென்றனர்.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஃபேஸ்புக்கில் முஸ்லிம்களுக்கு எப்போதும் இடமுண்டு: ஸக்கர்பெர்க்

மத அடிப்படைத் தன்மையைத் தாண்டி அனைவரும் உலவும் இல்லமாக ஃபேஸ்புக் திகழ்கிறது, இங்கு முஸ்லிம்களுக்கு எப்போதுமே இடமுண்டு என்று ஃபேஸ்புக்   ...