வெள்ளி, 27 நவம்பர், 2015

பணத்திற்காக காதலனுடன் சேர்ந்து தோழியை கொலை செய்த பெண்: மதுரையில் பயங்கர சம்பவம்.



மதுரை  இளம்பெண்  கொலை  வழக்கில்  திடீர் திருப்பமாக அப்பெண்ணின் தோழியே அவரை கொலை செய்தது அம்பலமாகியுள்ளது. மதுரை தல்லாகுளம் பகுதியை சேர்ந்த ஜெயக்குமார் துபாயில் பொறியாளராக  பணியாற்றி  வருகிறார்.



இவரது மனைவி பவித்ரா(23) தனது மாமியாருடன் வசித்து வருகிறார், இந்நிலையில்  கடந்த 20  ஆம் தேதி  வீட்டில் கொலை செய்யப்பட்டு கிடந்த பவித்ராவின்  உடலில்  இருந்து  நகைகள்  கொள்ளையடிக்கப்பட்டிருந்தன.

இதுதொடர்பாக விசாரணையை முடுக்கிவிட்ட பொலிசார், பவித்ராவின் தொலைபேசி  அழைப்புகளை  சோதனை  செய்ததில்,  அதில் சியாமளா என்பவர்  பவித்ராவோடு   கடைசியாக   பேசியது  தெரியவந்தது.

இதனைத்தொடர்ந்து சியாமளாவிடம் விசாரணை நடத்தியதில் அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்துள்ளார், இதனால் கிடுக்குப்பிடி விசாரணை நடத்தியதில் அவர் அளித்த தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

இதுகுறித்து  அவர்  அளித்துள்ள வாக்குமூலத்தில், எனது காதலன் ரமேஷ்க்கு  பணப்பிரச்சனை  இருந்தது.

இதனால், பணக்கார தோழியான பவித்ராவை கொலை செய்தால் பணம் கிடைக்கும் என்று இருவரும் சேர்ந்து திட்டம் தீட்டினோம். சம்பவம் நடைபெற்ற  அன்று  மாமியார் வேலைக்கு சென்றுவிட்டார், வீட்டில் பவித்ரா இருப்பதை அறிந்துகொண்டு, அவளுக்கு போன்செய்துவிட்டு, மிளகாய்ப்பொடி  கயிறு, கத்தி போன்றவற்றை எடுத்துக்கொண்டு சென்றோம்.

வீட்டிற்கு சென்றவுடன், பவித்ரா எங்கள் இருவருக்கும் காபி போட்டுக்கொடுத்தாள், அப்போது அவளது கைகளை கட்டிவிட்டு கத்தியால் குத்தி  ரமேஷ் கொலை செய்தான்.

பின்னர் பணம் மற்றும் நகைகளை எடுத்துக்கொண்டு ஆட்டோவில் சென்றுவிட்டோம்  என்று  கூறியுள்ளார்.

தற்போது இருவரையும் கைது செய்த பொலிசார், மதுரை மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தின் உத்தரவின்பேரில், 15 நாட்கள் சிறையில் அடைத்துள்ளனர்.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஃபேஸ்புக்கில் முஸ்லிம்களுக்கு எப்போதும் இடமுண்டு: ஸக்கர்பெர்க்

மத அடிப்படைத் தன்மையைத் தாண்டி அனைவரும் உலவும் இல்லமாக ஃபேஸ்புக் திகழ்கிறது, இங்கு முஸ்லிம்களுக்கு எப்போதுமே இடமுண்டு என்று ஃபேஸ்புக்   ...