இந்திய தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மனித நேய நிவாரண உதவிகளை செய்து வருகிறது.
அதன் வரிசையில் வில்லிவாக்கம்-சிட்கோ நகர், ரெட்ஹில்ஸ்-அம்பேத்கர் நகர்,பெரம்பூர் வீனஸ் பகுதி,புளியந்தோப்பு உள்ளிட்ட பகுதிகளில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஜமாஅத் சார்பில் சமையல் பொருட்கள் வழங்கப்பட்டது.
ரெட்ஹில்ஸ் திருவள்ளூர் நெடுஞ்சாலையிலுள்ள அம்பேத்கர் நகரில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு இதுவரை எந்த நிவாரணம் கிடைக்கவில்லை.
இவர்களின் வீடுகள் தண்ணீரில் முழுமையாக முழ்கிவிட்டது. தண்ணீரை வெளியேற்றக்கூட இதுவரை அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.
கலைவாணி பள்ளியில் தங்கி இருந்த பாதிக்கப்பட்ட மக்களை அங்கிருந்து வெளியேற்றிவிட்டனர் அதிகாரிகள்.
இந்திய தவ்ஹீத் ஜமாஅத் மாவட்ட ஆட்சியர் மற்றும் வட்டாச்சியரிடம் இந்த மக்களின் நிலை குறித்து பேசி வருகிறது. அரசின் அலட்சியம் தொடர்ந்தால் பாதிக்கப்பட்ட மக்களை திரட்டி இந்திய தவ்ஹீத் ஜமாஅத் கவன ஈர்ப்பு போராட்டங்களில் ஈடுபடும் என்று தெரிவித்துள்ளது.









கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக