முத்துப் பேட்டை செக்கடிக் குளத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற இறுதி அள வீடு நேற்று செய்யப் பட்டது. அப்போது போலீசார் குவிக்கப் பட்டதால் பதற்றம் ஏற்பட்டது.
செக்கடி குளத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்ற கலெக்டர் உத்தர விட்டுள்ளார். இதையடுத்து சில மாதங்களுக்கு முன் செக்கடிக் குளத்தை மன்னார்குடி ஆர் டிஓ செல்வ சுரப்பி தலைமையில் அதிகாரிகள் ஆய்வு செய்து அளவீடு பணிகளை மேற்கொண்டனர்.
இதில் 40க்கும் மேற்பட்ட ஆக்கிரமிப்பு குடியிருப்புகள் கண்டறியப்பட்டன. இதையடுத்து பேரூராட்சி நிர்வாகம், ஆக்கிரமிப்புகளை அகற்ற 3 முறை ஆக்கிரமிப்பாளர்களுக்கு நோட்டீஸ் அனுப்பியது. ஆனால் யாரும் ஆக்கிரமிப்புகளை அகற்ற முன் வரவில்லை.
இதையடுத்து நேற்று காலை முத்துப் பேட்டை செக்கடி குளத்துக்கு திருத்துறைப் பூண்டி தாசில்தார் பழனி வேல் தலைமையில் பேரூராட்சி செயல் அலுவலர் நாராயண மூர்த்தி, வருவாய் ஆய்வாளர் முருகேஷ் மற்றும் சர்வேயர்கள் சென்று இறுதி அளவீடு செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
அப் பகுதியில் முத்துப் பேட்டை இன்ஸ்பெக்டர் ராஜ்குமார், சப் இன்ஸ்பெக்டர்கள் செல்வராஜ், வேதரத்தினம் தலைமையில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டதால் பதற்றம் நிலவியது.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக