சனி, 28 நவம்பர், 2015

ஏர் இந்தியா விமானத்தை கடத்தப் போவதாக மிரட்டல் விடுத்த மாணவன் கைது.

மகாராஷ்டிராவில்  உள்ள  ஏர் இந்தியா வாடிக்கையாளர் சேவை மையத்துக்கு போன் செய்து விமானத்தைக் கடத்தப் போவதாக மிரட்டல் விடுத்த  மத்திய  பிரதேச மாணவனை  போலீசார்  கைது  செய்தனர்.

மத்தியபிரதேச மாநிலம் ஹர்தா மாவட்டத்தைச் சேர்ந்த 12-ம் வகுப்புப் படிக்கும் மாணவன் ஒருவன் கடந்த சில நாட்களுக்கு முன்பு தானேவில் உள்ள  ஏர் இந்தியா வாடிக்கையாளர் சேவை மையத்துக்கு தொடர்பு கொண்டு,  தான் ஐஎஸ் தீவிரவாத அமைப்பை சேர்ந்தவன் என்றும், நவம்பர் 28-ம் தேதி ஏர் இந்தியா விமானத்தைக் கடத்தப்போவதாகவும் கூறி இணைப்பை  துண்டித்தான்.

இதுகுறித்து காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டு விசாரணையை துரிதப்படுத்தினர். இந்நிலையில் மத்திய பிரதேச மாநிலத்திலுள்ள ஹர்தா மாவட்டத்திலிருந்து  அந்த  அழைப்பு வந்ததை கண்டுபிடித்தனர். அதையடுத்து  அங்குள்ள  பள்ளி ஒன்றில் 12-ம் வகுப்புப் படிக்கும் மாணவனை  போலீசார் கைது செய்தனர். அந்த மாணவனிடம் இருந்த மூன்று  சிம்  கார்டுகளை  போலீசார்  பறிமுதல்  செய்தனர்.

விசாரணையில், ‘ விளையாட்டுக்காக இதுபோன்ற மிரட்டல் விடுத்ததாக அவன்  கூறியதையடுத்து,  அவனை  போலீசார்  கைது  செய்து நீதிமன்றத்தில்  ஆஜர்  படுத்தினர்.





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஃபேஸ்புக்கில் முஸ்லிம்களுக்கு எப்போதும் இடமுண்டு: ஸக்கர்பெர்க்

மத அடிப்படைத் தன்மையைத் தாண்டி அனைவரும் உலவும் இல்லமாக ஃபேஸ்புக் திகழ்கிறது, இங்கு முஸ்லிம்களுக்கு எப்போதுமே இடமுண்டு என்று ஃபேஸ்புக்   ...