முத்துப்பேட்டை அருகே குன்னலூர் ராஜா தெருவைச் சேர்ந்தவர் குமார் (வயது 40). இவருக்கு உஷா என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.
இந்நிலையில் நேற்று கூலிவேலைக்கு சென்ற குமார் மாலை வரை வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. இந்நிலையில் இன்று அதிகாலை பாண்டி கடைத்தெரு பகுதி ரெயில்வே கேட் அருகே உள்ள வாய்க்காலில் ஒருவர் இறந்து கிடப்பதாக தகவல் கிடைத்தது.
இதையடுத்து குமார் மனைவி மற்றும் மகள்கள் அங்கு சென்று பார்த்த போது வாய்க்காலில் இறந்து கிடந்தது குமார் என்பது தெரியவந்தது.
புகாரின் பேரில் எடையூர் போலீசார் அங்கு விரைந்து உடலை திருவாரூர் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். பின்னர் வழக்குப்பதிவு செய்து குமார் வாய்காலில் தவறி விழுந்து இறந்தாரா அல்லது வேறு ஏதும் காரணமா என்று விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக