ஐபோன் 6எஸ் மற்றும் 6எஸ் ப்ளஸ் மாடல்களை வருடாந்திர ஆப்பிள் நிகழ்வில் அறிமுகப்படுத்திய அடுத்த நாளே ஆப்பிள் தரப்பில் 1.3 கோடி போன்கள் விற்பனையாகும் என்று எதிர்பார்ப்பதாக கூறப்பட்டது.
ஆனால் இந்த இலக்கை வெறும் மூன்றே நாட்களில் அதுவும் உலகின் பல நாடுகளில் இன்னும் விற்பனைக்கு வராத ஆப்பிள் 6 எஸ் வெற்றிகரமாக கடந்து விட்டது என்பது பலரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஆம், ஆப்பிள் நிறுவனத்தின் சமீபத்திய அறிமுகமான ஐபோன் 6 எஸ் மற்றும் ஐபோன் 6 எஸ் ப்ளஸ் போன்கள் கடந்த வெள்ளிக்கிழமை முதல் ஆப்பிள் ஸ்டோர்களில் விற்பனைக்கு வந்தது.
ஒரு பெண் வரிசையில் நிற்க முடியாது என்பதற்காக ரோபோவை அனுப்பி வைத்த சம்பவம் எல்லாம் அரங்கேறிய நிலையில், வெளியான முதல் 3 நாட்களில் மட்டும் ஐபோன் 6 எஸ் மாடல்களில் 13 மில்லியன்(1.3 கோடி) ஐபோன்கள் விற்பனையாகியிருப்பதாக ஆப்பிள் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து ஆப்பிள் நிறுவனம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் அதன் சி.இ.ஓ டிம் குக், ஆப்பிளின் விற்பனை வரலாற்றின் ஒட்டு மொத்த சாதனைகளையும் ஐபோன் 6 எஸ் மாடல் முறியடித்துள்ளது.
லைவ் போடோஸ், 3 டி டச் என்று இதன் புதிய வசதிகள் குறித்த வாடிக்கையாளர்களின் அனுபவங்கள் அபாரமாகவுள்ளது. என்றார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக