ஆப்பிள் நிறுவனம் சமீபத்தில் ஐபோன் 6எஸ், 6எஸ் பிளஸ் என்று இரு புது ஐபோன்களை வெளியிட்டுள்ளது.
பல லட்ச எண்ணிக்கையில் அமெரிக்கா உட்பட பல நாடுகளில் விற்பனை ஆகிவிட்டது. வரும் 15ம் தேதி இந்தியாவில் விற்பனைக்கு வர உள்ளது. இதற்காக மும்பை உட் பட சில முக்கிய நகரங்களில் புக்கிங் ஆரம்பமாகி விட்டது.
மும்பையில் 2,000 ரூபாய் செலுத்தி புக்கிங் செய்து கொள்ளலாம். இப்போது பல ஆயிரம் பேர் புக்கிங் செய்து விட்டனர். ‘வரும் 13ம் தேதி வரை புக்கிங் நடக்கும். அதன் பின் 15ம் தேதி நள்ளிரவு ஐபோன்கள் விற்பனைக்கு வந்து விடும்’ என்று கடைக்கார்கள் கூறினர்.
இந்தியாவில் ஐபோன் 6எஸ் விலை குறைந்த பட்சம் 62,000 ரூபாய். இது 16 ஜிபி திறன் கொண்டது. 6எஸ் பிளஸ் 128 ஜிபி திறன் கொண்டது, விலை 92,000 ரூபாய்.
இது போல, 6எஸ் ஐபோன் 64 ஜிபி விலை 72,000 ரூபாய்; 128 ஜிபி திறன் கொண்டது 82,000 ரூபாய். 6எஸ் பிளஸ் போன், 16 ஜிபி விலை 72,000 ரூபாய். 64 ஜிபி விலை 82,000 ரூபாய். கடைக்காரர்கள் தரப்பில் கூறப்பட்ட விலைகள் இது.
ஆனால், ஆப்பிள் அதிகாரப் பூர்வமாக அறிவிக்கவில்லை. அது அறிவிக்கும் போது உண்மை விலை வேறுபடலாம்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக