சனி, 7 நவம்பர், 2015

சவுதியில் கை துண்டிக்கப்பட்ட வேலூர் பெண் சென்னை வந்தார்: வீடியோ இணைப்பு.


சவூதி அரேபியா, ரியாத்திற்கு வீட்டு பணிப்பெண் வேலைக்கு இந்தியாவிலிருந்து  வந்த  தமிழ் பெண்மணி கஸ்தூரி அம்மாள் முனி ரத்தினம் கை துண்டிக்கப்பட்ட நிலையில் 'கிங்டம்' மருத்துவமனையில் தொடர்  சிகிற்சை  பெற்று வந்தார்.




அவரை இந்தியாவிற்கு அழைத்து வருவதற்கும் உரிய மருத்துவ சிகிச்சை அளிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கும்படி தமிழக அரசு கேட்டுக்கொண்டது.

இதையடுத்து கஸ்தூரி விமானம் மூலம் இன்று சென்னை வந்தார். அரசு அதிகாரிகள்  அவரை  சந்தித்து நலம் விசாரித்தனர். பின்னர், கஸ்தூரிக்கு அரசு செலவில் சிகிச்சை அளிக்க வேண்டும் என்று அவரது மகன் கேட்டுக்கொண்டார். இதையடுத்து, அவர் அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக  சேர்க்கப்பட்டுள்ளார்.

 'இந்தியன் சோசியல் போரம்' என்ற இஸ்லாமிய அமைப்பின் தொடர் முயற்சிகளாலும், சவூதி அரசும்,  இந்தியா தூதரகமும் இணைந்து எடுத்த துரித நடவடிக்கைகளால் அது  சம்பந்தமான வழக்கு நடைபெற்று வரும் நிலையில் கஸ்தூரியை     இன்று சனிக்கிழமை சென்னைக்கு   சவூதி ஏர்லைன்ஸ் விமானத்தில் அனுப்பி வைக்கப்பட்டார்.

அவரை வரவேற்று அவரது வீட்டிற்கு கொண்டு சென்று சேர்க்கும் ஏற்பாடுகளை  தாயகத்தில் உள்ள  'சோசியல் டெமாக்ரடிக் பார்டி ஆஃப் இந்தியா செய்தது. 

இந்த செய்தியை எந்த ஊடகங்களும் தொலைக்காட்சிகளும் தெரிவிக்கவில்லை.






திருட வந்த இடத்தில் ஏழ்மை நிலைகண்டு மனம் வெதும்பிய திருடன் செலவுக்கு 1000 கொடுத்த சம்பவம்.

திருட வந்த இடத்தில், அவ்வீட்டாரின் ஏழ்மை நிலையை கண்டு மனம் வெதும்பிய திருடன், அவர்களிடம், 1,000 ரூபாய் பணம் கொடுத்து சென்றுள்ளான்.

பட்டுக்கோட்டையிலிருந்து தஞ்சை சென்ற தனியார் பஸ் கவிழ்ந்து பள்ளி ஆசிரியை பலி. படங்கள் இணைப்பு.


பட்டுக்கோட்டையில் இருந்து தஞ்சைக்கு இன்று காலை தனியார் பஸ் புறப்பட்டு  வந்தது. இந்த பஸ் காலை 8.40 மணியளவில் தஞ்சை அருகே உள்ள  சூரக்கோட்டை சைதாம்பாள்  புரத்தில் வந்து கொண்டிருந்தது.

வயதுக்கு வந்த ஆண்கள் & பெண்களுக்காக.....வீடியோ இணைப்பு.

வாலிப  வயதில்  ஆண்கள்  & பெண்களுக்கு ஏற்படும் பிரச்னைகளுக்கு எளிய மூலிகை  வைத்தியத்தை  மூலிகை வைத்தியர் இராஜமாணிக்கம் அவர்கள் செய்து காட்டுகிறார்.

வெளிநாடுகளில் பணிபுரியும் நண்பர்களுக்கு ஓர் எச்சரிக்கை தகவல்.

 சிங்கப்பூரில் வேலை செய்யும் தமிழக நண்பர் ஒருவருக்கு, சிங்கப்பூர் ICA ஆபீஸிலிருந்து (Immigration and Checkpoint Authority) பேசுவதாக ஒரு தொலைபேசி  அழைப்பு  வந்துள்ளது.

இந்தியாவில் எஸ்ஐ ஆகும் முதல் திருநங்கை பிரித்திகா யாஷினி!


தமிழகத்தை சேர்ந்த திருநங்கை பிரித்திகா யாஷினி எஸ்.ஐ. பதவிக்கு முழு தகுதி உடையவராக இருப்பதாகவும், எனவே அவருக்கு அந்த பதவியை வழங்கலாம்  என்றும்  சென்னை  உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வெள்ளி, 6 நவம்பர், 2015

துபையில் முடங்கிக்கிடக்கும் சிவகங்கை தொழிலாளி: மனைவி, 4 குழந்தைகளுடன் நாடு திரும்ப முடியாமல் தவிப்பு...


சிவகங்கை மாவட்டத்தைச் சேர்ந்த தொழிலாளி குடும்பம், நாடு திரும்ப வழியின்றி  துபையில்  முடங்கிக்  கிடப்பதாகப்  புகார் எழுந்துள்ளது.

சிவகங்கை மாவட்டம்,  காளையார் கோவிலைச் சேர்ந்தவர் கார்த்திகேயன் (39). இவரது மனைவி பிரான்மலையைச் சேர்ந்த கவிதா (37). இவர்களுக்கு இஷிதா (9 ),  ஷிரியா (7)  ஆகிய  2 பெண் குழந்தைகளும், காளீஸ் (5), நமீத் (3) என 2 ஆண்   குழந்தைகளும்   உள்ளனர்.

ஃபேஸ்புக்கில் முஸ்லிம்களுக்கு எப்போதும் இடமுண்டு: ஸக்கர்பெர்க்

மத அடிப்படைத் தன்மையைத் தாண்டி அனைவரும் உலவும் இல்லமாக ஃபேஸ்புக் திகழ்கிறது, இங்கு முஸ்லிம்களுக்கு எப்போதுமே இடமுண்டு என்று ஃபேஸ்புக்   ...