புதன், 9 டிசம்பர், 2015

விபத்தில் சிக்கி உயிருக்கு போராடிய ரோந்து குதிரையை கட்டிப்பிடித்து அழுத போலீஸ் அதிகாரி

அமெரிக்காவின்  ஹூஸ்டன் நகரத்தை  சேர்ந்த போலீஸ் அதிகாரி ஹர்ஜான். அந்த பகுதியில் ரோந்து செல்வதற்கு அவர் பயன்படுத்தும் குதிரை சார்லோட். சார்லோட் நான்கு ஆண்டுகளாக காவல்துறையில் பணியாற்றி வந்தது.


 மேலும் அந்த காவல்நிலையத்தில் மட்டும் அல்லாமல் அப்பகுதியைச் சேர்ந்த குழந்தைகளின் செல்ல விலங்காகவும் சார்லோட் இருந்துள்ளது.

இந்நிலையில் கடந்த 3-ம் தேதி ஹர்ஜான் சார்லோட் மீது ஏறி ரோந்து சென்றுள்ளார். அப்போது கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் குதிரை மிரண்டு பதற்றத்துடன் சென்றபோது ஒரு லாரி மோதி படுகாயம் அடைந்து சாலையோரமாக விழுந்துவிட்டது. ஆனால், குதிரை மேல்  இருந்த  ஹர்ஜானுக்கு லேசான  காயம்  மட்டுமே  ஏற்பட்டுள்ளது.

படுகாயம் அடைந்த குதிரை உயிருக்குப் போராடிக்கொண்டிருந்தபோது ஹர்ஜான் குதிரையின் தலையை கட்டிப்பிடித்துக்கொண்டு சாலையிலேயே படுத்துக்கொண்டு அழுதுள்ளார். சிலர் அவரை விலக்க முயன்ற போது அவர் மறுத்துள்ளார். ஒரு மருத்துவர் வந்து சிகிச்சை அளித்த போதும் குதிரையை காப்பாற்ற  முடியவில்லை.

ஹர்ஜான் குதிரையின் தலையை கட்டிப்பிடித்துக்கொண்டு சாலையிலேயே படுத்திருக்கும் படம் இணையத்தில் வெளியாகி பலரது இதயங்களை கனக்கவைத்து வருகிறது.




கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஃபேஸ்புக்கில் முஸ்லிம்களுக்கு எப்போதும் இடமுண்டு: ஸக்கர்பெர்க்

மத அடிப்படைத் தன்மையைத் தாண்டி அனைவரும் உலவும் இல்லமாக ஃபேஸ்புக் திகழ்கிறது, இங்கு முஸ்லிம்களுக்கு எப்போதுமே இடமுண்டு என்று ஃபேஸ்புக்   ...