புதன், 9 டிசம்பர், 2015

குப்பைகளை சுத்தம் செய்த போது TNTJ வினர் கண்டெடுத்த 1லட்சம் ரூபாய் மற்றும் 10 பவுன் நகை:

குப்பைகளை சுத்தம் செய்த போது டிஎன்டிஜேவினர் கண்டெடுத்த 1லட்சம் ரூபாய்; 10 பவுன் நகை:- பூரணி என்ற உரிமையாளரிடம் ஒப்படைத்த தவ்ஹீத் ஜமாஅத்தினர்! மெய்சிலிர்க்க வைத்த மனிதநேயப்பணி சென்னையில்  நடந்துள்ளது.


தூய்மைப்பணியின் தொடர்ச்சியாக இன்றையதினம் சைதாப்பேட்டை பகுதியில் டிஎன்டிஜேவின் தொண்டர் படையினர் துப்புரவுப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது குப்பைத்தொட்டியில் ஒரு டிபன் பாக்ஸ் கண்டெடுக்கப்பட்டது.  அதை  நமது  சகோதரர்கள்  திறந்து பார்த்த போது அதில் கிட்டத்தட்ட 10பவுன் நகையும், ரூ 1லட்சம் ரொக்கப்பணமும் இருந்துள்ளது.

பணத்தையும், நகையையும் தொலைத்த துயரத்தில் தற்கொலைக்கு முயன்றுள்ளார் அதன் உரிமையாளர் பூரணி என்ற மூதாட்டி. கண்டெடுக்கப்பட்ட  உடனேயே  இது  குறித்து விசாரித்த தவ்ஹீத் ஜமாஅத்தின் தென்சென்னை மாவட்ட நிர்வாகிகள் பூரணி - பாலகுமாரன் தம்பதியினருடைய  பணமும்  நகையும்தான் அது என்பதை உறுதிப்படுத்தினர்.

அந்த தம்பதியர்களிடம் பணத்தையும், நகையையும் நமது சகோதரர்கள் பத்திரமாக  ஒப்படைக்க நகைகளை சரிபார்த்த பிறகு, பணத்தையும் சரிபார்த்து  டிபன் பாக்ஸோடு அதை பெற்றுக்கொண்டனர்.

அல்ஹம்துலில்லாஹ்...

டிஎன்டிஜேவினர் செய்த இந்த மனிதநேயப் பணியைக் கண்டு   அந்தப் பகுதியில் உள்ள பிறமத சகோதரர்கள் அனைவரும் ஆச்சர்யத்தில் ஆழ்ந்துள்ளனர்.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஃபேஸ்புக்கில் முஸ்லிம்களுக்கு எப்போதும் இடமுண்டு: ஸக்கர்பெர்க்

மத அடிப்படைத் தன்மையைத் தாண்டி அனைவரும் உலவும் இல்லமாக ஃபேஸ்புக் திகழ்கிறது, இங்கு முஸ்லிம்களுக்கு எப்போதுமே இடமுண்டு என்று ஃபேஸ்புக்   ...