முஸ்லிம்களின் நிவாரனப்பணியைக் கண்டு இந்துச் சொந்தங்கள் எல்லாம் வியந்து நிற்கின்ற வேளையில் இந்து இயக்கங்களைக் கூட அது அது களத்தில் இறக்கி விட்டுள்ளது என்றால் அது மிகையில்லை !
கடந்த ஒருவார காலமாக கழுத்தளவு வெள்ளத்தில் களத்தில் நிற்கும் நிற்கும் மஸ்ஜிதுல் முஃமின் தஃவா குழு வடசென்னையில் இந்து இயக்கங்கள் ஆதிக்கமுள்ள ஒரு பகுதியில் பணியாற்றிய பொது இதை உணர முடிந்தது !
நிவாரணப்பணியில் பொருட்களை குவிக்கும் ஜெயின் சமூகம் கூட எங்களால் கழுத்தளவு தண்ணீரில் செல்ல முடியவில்லை இதையும் கொஞ்சம் விநியோகியுங்கள் என்று நம்மிடம் ஒப்படைக்கும் அளவுக்கு சம்பவம் நடந்தது.
அடுத்து கேட்பாரற்ற உள்பகுதிகளில் கழுத்தளவு நீரில் சென்றபோது மிதந்து வரும் மலங்கள் தங்கள் இறைவனிடத்தில் நறுமணமிக்க வாசனைத் திரவியங்களாக எண்ணிப் பணியாற்றும் நமது சகோதரர்கள் ஆற்றிய் களப்பணி கண்டு அந்த மக்கள் வியந்தனர்.
எங்கள் பகுதியில் வாக்குகேட்கும் அரசியல் கட்சிகள் யாரும் வரவில்லை ! நீங்கள் தேர்தலில் நின்றால் எங்கள் வாக்கு உங்களுக்கத்தான் என்று கூறிய போது நாங்கள் வாக்கை எதிர்பார்த்து பணிசெய்யவில்லை! மறுமையை எதிர்பார்த்து வேலை செய்பவர்கள் என்று நம் சகோதரர்கள் கூறிய சம்பவம் நடந்தது !
இதையெல்லாம் கண்டு நான்கு நாட்களுக்கப் பின் களத்தில் இறங்கிய இந்து இயக்கத்தவர்கள் அவர்களும் நமது சகோதர்ரகளிடம் உணவு இருக்கிறது பாய் தண்ணீர் தர முடியுமா ? என்று தண்ணீர் கேட்க அவர்களுக்கும் ஒரு மூட்டை தண்ணீர் பாக்கெட்டுகளைக் கொடுத்து உதவினர் நம் சகோதரர்கள். அல்ஹம்து லில்லாஹ் !
இந்த மழை நம் மீது படிந்த கரைகளைக் கழுவி இருக்கிறது!
இந்த வெள்ளம் தவறான எண்ணங்களை அடித்து சென்றது!
எல்லாபுகழும் இறைவனுக்கே !
செங்கிஸ்கான்.
புகைப்படங்கள் உதவி..முகநூல் நண்பர்கள்.



















கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக