சென்னையில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எஸ்.டி.பி.ஐ. கட்சியின் மகளிரணி சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கப்பட்டன.
கடந்த சில வாரங்களாக பெய்த கனமழை சென்னை, காஞ்சிபுரம், கடலூர் மாவட்டங்களை புரட்டி போட்டது. வரலாறு காணாத அளவில் சென்னையில் பெய்த வெளுத்து வாங்கிய கனமழைக்கு பெரும்பாலான மக்கள் மிகக் கடுமையைாக பாதிக்கப்பட்டனர்.
பாதிக்கப்பட்ட மக்களுக்குத் தேவையான அடிப்படை நிவாரணங்களை பல்வேறு தொண்டு நிறுவனங்கள், சமூக நல அமைப்புகள், தனியார் நிறுவனங்கள், தமிழக அரசு் மற்றும் பிற அரசியல் கட்சிகள் உணவு பொருட்கள், போர்வை, தண்ணீர் பாட்டில் உள்ளிட்ட பொருட்களை வழங்கி வருகின்றன.
அந்த வகையில் கனமழையால் பாதிக்கப்பட்ட வடசென்னை மாவட்டம் திருவிக நகர் தொகுதி தாசாமக்கானில், மழைநீரால் உடைமைகளை இழந்த பெண்களுக்கு வடசென்னை மாவட்ட எஸ்.டி.பி.ஐ மகளிரணி பொதுச்செயலாளர் வழக்கறிஞர் ஷாகிரா பானு தலைமையில் நிவாரணப் பொருட்கள் வழங்கப்பட்டன.
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான ஆடைகள், பெண்களுக்கு தேவையான சுகாதாரப் பொருட்கள், உணவு பொருட்கள் மற்றும் தண்ணீர் பாட்டில்கள் ஆகியன நிவாரணப் பொருட்களாக வழங்கப்பட்டன.
எஸ்.டி.பி.ஐ மாநில செயலாளர் அமீர் ஹம்சா மற்றும் சென்னை மாவட்ட வழக்கறிஞர் அணி தலைவர் வழக்கறிஞர் ராஜா முகம்மது ஆகியோர் ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இந்நிகழ்வில், எஸ்.டி.பி.ஐ கட்சியின் மகளிரணியை சேர்ந்த ஜன்னத்துல் பிர்தவ்ஸ், மசின்பீ, ஷாபியா, ஜனினா மற்றும் ரஹ்மத் ஆகியோர் கலந்து கொண்டு 400 க்கும் மேற்பட்டோருக்கு நிவாரணப் பொருட்களை வழங்கினர்.








கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக