தமிழில் மென்பொருளை அறிமுகம் செய்தவர் ஸ்ரீநிவாஸ். தமிழ் மீது பற்றுக்கொண்ட இவர் கோவில்களில் தமிழ் வழிபாட்டுக்கு ஏற்பாடு செய்தார். மேலும் தமிழ் முறைப்படி திருமணம் செய்பவர்களுக்கு இலவசமாக திருமண மண்டபம் ஏற்பாடு செய்தவர்.
மேலும் தமிழ் எழுத்தில் எண்களை கொண்ட கடிகாரம், தமிழ் எண் நாள் காட்டி, தமிழ் கடிகாரத்துக்கு மொபைல் செயலி உள்ளிட்டவைகளை உருவாக்கியவர் ஸ்ரீனிவாஸ்.
தெய்வமுரசு என்ற ஆன்மிக மாத இதழின் பதிப்பாளராக இருந்த இவர் எஸ்.ஆர்.எம். பல்கலைக் கழகத்தின் தமிழ் பேராயத்துடன் இணைந்து சைவத்தமிழ் பட்டயபடிப்பை நடத்தி வந்தார்.
அடையாறு ஆற்று வெள்ளத்தில் சிக்கி ஸ்ரீநிவாஸ் தனது மனைவி சங்கராந்தியுடன் பலியான சோக தகவல் தாமதமாக தெரிய வந்து உள்ளது.
ஸ்ரீனிவாஸ் வீடு ஈக்காட்டுதாங்கல் மாஞ்சோலை தெருவில் உள்ளது. பக்கத்து தெருவில் இவரது தம்பி கந்தசாமி வீடு உள்ளது. கடந்த வாரம் செவ்வாய்க்கிழமை அடையாறு ஆற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடிய போது தம்பி கந்தசாமி வீட்டுக்குள் தண்ணீர் புகுந்து விடுமோ என்று இரவு முழுவதும் தூங்காமல் புலம்பிக் கொண்டு இருந்தார். மறுநாள் பொழுது விடிந்தது. செல்போனில் தம்பியை தொடர்பு கொண்டு தனது தெருமுனைக்கு வரும்படி கூறினார்.
அதோடு தானும் வீட்டை விட்டு இறங்கி தெருவில் நடக்க தொடங்கினார்.
அப்போது சுழன்று அடித்து வந்த வெள்ளம் அவரை அடித்துத் தள்ளி தனது போக்கிலேயே இழுத்துச் சென்றது. இதனை பார்த்து கதறி துடித்து ஓடிவந்த மனைவி சங்கராத்தியையும் அடையாறு வெள்ளம் விட்டு வைக்கவில்லை.
2 நாள் கழித்து அடையாளம் தெரியாத பிணமாக 2 பேர் உடல்களும் ராயப்பேட்டை மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டது.
அங்குதான் அவர்களது உடல் அடையாளம் காணப்பட்டது. ஞாயிற்றுக்கிழமை அவர்களது உடல் பெசன்ட் நகர் மின்மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
வரலாற்றில் தடம் பதித்த முக்கிய பிரமுகர்களின் மட்டுமல்லாமல் பலரின் மரணம் கூட பக்கத்து வீட்டுக்கு தெரியாமல் மழை வெள்ளம் அமுக்கி விட்டது சோகத்தில் பெரும் சோகமாகி விட்டது.


கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக