ஞாயிறு, 6 டிசம்பர், 2015

முத்துப்பேட்டை அருகே 10–ம் வகுப்பு மாணவனுக்கு கத்தி குத்து: மாணவன் கைது.

முத்துப்பேட்டை   ஆசாத்நகரை  சேர்ந்தவர் அப்துல்லாசேட்.  மீன்  வியாபாரி.  இவரது  மகன்  சாகுல் அமீது (வயது 17).

முத்துப்பேட்டை தர்கா பகுதியை சேர்ந்தவர்  அசன் ராஜா இவரது மகன் அகமது (16). இவர் அதே  பகுதியில் உள்ள ஒரு பள்ளியில் 10–ம் வகுப்பு படித்து வருகிறார்.



 இவருக்கும்  சாகுல் அமீதுவுக்கும் இடையே நேற்று தகராறு ஏற்பட்டு உள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த சாகுல்அமீது அகமதுவை கத்தியால் குத்தியுள்ளார்.

இதில்  படுகாயம் அடைந்த அகமதுவை முத்துப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு  கொண்டு  சென்றனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதுகுறித்து  முத்துப்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து சாகுல் அமீதை கைது செய்தனர். முத்துப்பேட்டையில் 10–ம் வகுப்பு படிக்கும் மாணவன்  கத்தியால்  குத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஃபேஸ்புக்கில் முஸ்லிம்களுக்கு எப்போதும் இடமுண்டு: ஸக்கர்பெர்க்

மத அடிப்படைத் தன்மையைத் தாண்டி அனைவரும் உலவும் இல்லமாக ஃபேஸ்புக் திகழ்கிறது, இங்கு முஸ்லிம்களுக்கு எப்போதுமே இடமுண்டு என்று ஃபேஸ்புக்   ...