சென்னையில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு, இந்தி நடிகர் ஷாருக்கான் ரூ.1 கோடி நிவாரண நிதி வழங்கியுள்ளதாக என்று தகவல் வெளியாகி உள்ளது.
தமிழகத்தில் 2 வாரங்களுக்கும் மேல் கனமழை பெய்து பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது. வெள்ள நிவாரண பணிகளில் அரசு தற்போது முழுவீச்சில் ஈடுபட்டுள்ளது.
தமிழக அரசின் வெள்ள நிவாரண நிதிக்கு நடிகர்கள் பலர் நிதி உதவி வழங்கி வருகிறார்கள். சாய்னா நேவால், தீபிகா பல்லிகல் போன்ற விளையாட்டு பிரபலங்களும் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ முன்வந்துள்ளனர்.
அந்த வகையில் தமிழக முதல்-அமைச்சரின் வெள்ள நிவாரண நிதிக்கு பாலிவுட் சூப்பர் ஸ்டாரும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் உரிமையாளருமான ஷாருக் கான் ரூ.1 கோடி வழங்கி உள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது. இதுதொடர்பாக அவர் தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு கடிதம் எழுதியிருப்பதாகவும் கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக