உத்தரபிரதேசம் மாநிலம் ஆக்ராவில் 160 பாஸ்போர்ட்டுகள் வைத்திருந்த பிபிஏ மாணவனை போலீசார் கைது செய்தனர்.
பீகார் மாநிலம் கோபால்கஞ்ச் பகுதியை சேர்ந்த இளைஞர் விகஸ் குமார். இவர் ஆக்ராவில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் பிபிஏ முதலாமாண்டு பயின்று வருகிறார்.
விகாஸ் குமார் தங்கியிருந்த வீட்டின் உரிமையாளர் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விகாஸ் குமாரை கைது செய்ததாக மதுரா போலீஸ் அதிகாரி ராகேஷ் சிங் தெரிவித்தார்.
விசாராணை நடத்திய போலீசார் கூறுகையில்:-
”விகாஸ் குமாருக்கு கல்லூரி நிர்வாகம் தங்குவதற்கு முதலில் அறை ஒதுக்கியுள்ளது. ஆனால் விகாஸின் சந்தேகத்திற்கிடமான நடவடிக்கையை கண்டு அவரை நிர்வாகம் வெளியேற்றியுள்ளது. பின்னர் அவர் தனி அறை ஒன்று எடுத்து தங்கியுள்ளார். ஆனால் அங்கும் விகாஸ் குமாரின் விநோதமான நடவடிக்கையை அறையின் உரிமையாளர்கள் கண்டு கொண்டனர்.
அடிக்கடி கதவின் பூட்டினை மாற்றுவது, யாரிடமும் பேசாமல் அறைக்குள்ளேயே இருப்பது உள்ளிட்ட செயல்பாடுகளை வீட்டின் உரிமையாளருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. பின்னர் உரிமையாளர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.” என்றனர்.
அந்த இளைஞரிடம் இருந்து 160 பாஸ்போர்ட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன. அதில் பெரும்பாலான பாஸ்போர்ட்டுகள் அரபு நாடுகளுக்கு உரியது. மேலும் விசாரணையில் பாஸ்போர்ட்கள் அனைத்தும் போலியானவை என்பது தெரியவந்தது. மேலும் விகாஸிடம் இருந்து அவரது லேப்டாப்கள், செல்போன் உள்ளிட்டவை போலீசார் பறிமுதல் செய்தனர்.
போலி பாஸ்போர்ட்களை கொண்டு அந்த இளைஞர் ஏதோ மோசடியில் ஈடுபட்டு வருவதாக கூறிய போலீசார் அது குறித்து விசாராணை மேற்கொண்டு வருகின்றனர்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக