ஞாயிறு, 6 டிசம்பர், 2015

முத்துப் பேட்டை அதிமுக பிரமுகரின் அண்ணன் கொலையால் பதற்றம். முன்னெச்சரிக்கையாக 9 பேர் கைது.

முத்துப் பேட்டை அருகே அதிமுக பிரமுகரின் அண்ணன் கொலை வழக்கில் முன்னெச்சரிக்கை   நடவடிக்கையாக  9 பேரை போலீசார் கைது செய்தனர்.


திருவாரூர் மாவட்டம் முத்துப் பேட்டை அடுத்த கோவிலூர் வடகாட்டை சேர்ந்தவர் மதன் (44). இவரது தம்பி ஜெகன். இவர் அதிமுக ஒன்றிய கவுன்சிலராகவும், தொகுதி அதிமுக இணை செயலாளராகவும், ஒன்றிய துணை  செயலாளராகவும்  உள்ளார். 

கடந்த நவம்பர் 25ம் தேதி இரவு மதன் முத்துப் பேட்டை கடைத் தெருவுக்கு வந்து விட்டு பைக்கில் வீடு திரும்பிய போது சித்தேரி குளம் அருகே மர்ம கும்பல்  கொடூரமாக  வெட்டி கொலை செய்தது. இது குறித்து ஜெகன் கொடுத்த புகாரின் பேரில் முத்துப் பேட்டை போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வந்தனர். மேலும் கொலையாளிகளை பிடிக்க 3 தனிப் படை  அமைக்கப்பட்டது.

இதில் பாஜக மாவட்ட  செயலாளர் மாரி முத்து, போஸ்ட் மாஸ்டர் செல்வராஜ், கோவிலூர் மணல் மேட்டை சேர்ந்த ராஜேஷ், சரவணன், வினோத் குமார்,  மந்திர மூர்த்தி, வாய் மேட்டை சேர்ந்த சந்திர போஸ், சுதாகர், கார் டிரைவர்கள்  மணி கண்டன், தமிழரசன் உட் பட 10 பேர் சிக்கினர். மேலும்  பலரை  போலீசார்  தேடி  வந்தனர்.

இந் நிலையில் கோவிலூர் மற்றும் முத்துப் பேட்டை சுற்றுப் புற பகுதியில் தொடர்ந்து பதற்றமான சூழ் நிலை உருவாகி உள்ளதால் நேற்று முன் தினம் இரவு போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ஆலங்காடு கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் ஒன்றியக் குழு துணைத் தலைவர் சித்திரவேல், முன்னாள்  ஊராட்சி  தலைவர்  மோகன், அதே பகுதியை சேர்ந்த அசோக், கவுசிக், கோபால கட்டளை பகுதியை சேர்ந்த மருதையன், மகேந்திரன், வேலுச்சாமி, சதீஸ், ரத்தின வேல், வீரன் வயல் கிராமத்தை சேர்ந்த தேவதாஸ், பெத்த வேளான் கோட்டகத்தை சேர்ந்த மதியழகன், கோவிலூரை சேர்ந்த ரவி உட் பட 12 பேரை கைது செய்தனர்.

 நேற்று சித்திரவேல், மோகன், மருதையன் ஆகிய 3 பேரை போலீசார் விடு வித்தனர். மற்ற 9 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து திருத்துறைப் பூண்டி கோர்ட்டில்  ஆஜர் படுத்தினர்.


இந் நிலையில் கோவிலூர் வட காட்டை சேர்ந்த கொலை செய்யப் பட்ட மதனின்  உறவினர் மந்திர மூர்த்தி மகன் குண சேகரன் (35) என்பவரை கடந்த டிசம்பர்  2ம்தேதி  முதல் காணவில்லை. அவரது வீட்டு வாசலில் அவரது பைக் மற்றும் செல் போன் ஆகியவை கிடந்துள்ளது. குண சேகரனை பல் வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை. இதனால் சந்தேக மடைந்த அவரது  தந்தை  மந்திர மூர்த்தி முத்துப் பேட்டை காவல் நிலையத்தில் நேற்று  முன் தினம்  இரவு புகார்  கொடுத்தார்.

அதன் பேரில் இன்ஸ் பெக்டர் ராஜ் குமார் வழக்குப் பதிவு செய்து மாய மான குணசேகரனை  தேடி வருகிறார்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஃபேஸ்புக்கில் முஸ்லிம்களுக்கு எப்போதும் இடமுண்டு: ஸக்கர்பெர்க்

மத அடிப்படைத் தன்மையைத் தாண்டி அனைவரும் உலவும் இல்லமாக ஃபேஸ்புக் திகழ்கிறது, இங்கு முஸ்லிம்களுக்கு எப்போதுமே இடமுண்டு என்று ஃபேஸ்புக்   ...