ஞாயிறு, 6 டிசம்பர், 2015

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இலவச விமான சேவை.

சென்னையில்  பெய்து வரும் தொடர் கன மழையால், எங்கும் வெள்ளக் காடாக காட்சி அளிக்கிறது. வெள்ளத்தால் சாலை, ரயில் தண்டவாளங்கள் மட்டுமின்றி, சென்னை விமான நிலையமும் பாதிப்புக்கு ஆளானது. விமான நிலையத்தை  வெள்ளம் சூழ்ந்ததால் மூடப் பட்டது.


இந் நிலையில், அரக்கோணத்தில் உள்ள ஐ.என்.எஸ். ராஜாளி கடற்படை விமான தளம்,  தற்காலிகமாக பயணிகள் விமான தளமாக பயன் படுத்தப் பட்டு வருகிறது. அங்கிருந்து இந்தியாவின் பல் வேறு மாநிலங்களுக்கு விமான  சேவை  நடந்து  வருகிறது.

தற்போது வெள்ளத்தால் பாதிக்கப் பட்டவர்கள் பயன் பெறும் வகையில், தாம்பரத்தில் உள்ள இந்திய விமானப் படை பயிற்சி மையத்தில் இருந்து பெங்களூர், அரக்கோணம் ஆகிய இடங்களுக்கு விமான போக்கு வரத்து தொடங்கப் பட்டுள்ளது.

இந்த சேவையில் 11 ஹெலி காப்டர்களும், 3 விமானங்களும் ஈடு பட்டுள்ளன. ஒவ்வொரு ஹெலி காப்டரிலும் 24 பேர் அமரக் கூடிய வசதி உள்ளது. ஒரு விமானத்தில்  100 பேர்  அமரலாம்.

 இந்த சேவையை பெரும் பாலும் மழையினால் பாதிக்கப் பட்ட வட மாநிலத்தை  சேர்ந்த குடும்பங்கள், மற்றும் மாணவ, மாணவியர்கள் மட்டுமே  பயன் படுத்தி வருகின்றனர்.

சென்னை விமான நிலையத்தில் இருந்து விமானம் செல்வதற்கு வழியில்லாத சூழ் நிலையில், தாம்பரம் விமான படை பயிற்சி மையத்தில் இருந்து அரக்கோணம் விமான நிலையத்திற்கு இந்த சேவைகள் இயக்கப் படுகிறது.

இதில் சுற்றுலா மற்றும் தொழில் சார்ந்தவர்களுக்கு அனுமதி கிடையாது. சென்னை,  திருவள்ளூர், காஞ்சிபுரத்தில் மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட  மக்களுக்கு  மட்டுமே  இந்த  வாய்ப்பு அளிக்கப் படுகிறது.

கன மழையால் பாதிப்புக்கு ஆளானவர்களிடம் கட்டணம் வசூலிக்காமல் இலவசமாக விமானத்தில் அழைத்து செல்லப் படுகின்றனர் என்பது குறிப்பிடத் தக்கது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஃபேஸ்புக்கில் முஸ்லிம்களுக்கு எப்போதும் இடமுண்டு: ஸக்கர்பெர்க்

மத அடிப்படைத் தன்மையைத் தாண்டி அனைவரும் உலவும் இல்லமாக ஃபேஸ்புக் திகழ்கிறது, இங்கு முஸ்லிம்களுக்கு எப்போதுமே இடமுண்டு என்று ஃபேஸ்புக்   ...