திங்கள், 7 டிசம்பர், 2015

மீண்டும் நீராவி இன்ஜின் கார்...உக்ரைன் நாட்டில் ஓடுகிறது.

உக்ரைனைச் சேர்ந்த கார் ஓட்டுனர்கள் மாற்று எரிபொருளைப் பயன்படுத்தி வருகிறார்கள். பெட்ரோல், காஸ் போன்றவற்றின் விலையேற்றத்தை அவர்களால் சமாளிக்க முடியவில்லை.

 அதனால் மரத்துண்டுகளை எரித்து, நீராவி மூலம் வண்டி ஓடுவதற்கான ஆற்றலைப் பெற்றுக்கொள்கிறார்கள். இதனால்  கணிசமாகப்  பணம்  மிச்சமாகிறது  என்கிறார்கள்.


ஆட்டோ மொபைல் துறை மெதுவாக மின்சக்தியை நோக்கிப் பயணிக் கிறது. மரத்தை எரித்து, ஆற்றலைப் பயன்படுத்துவது என்பது பழைய வழிமுறை. முதல் உலகப் போரில் இப்படிப்பட்ட வாகனங்கள்தான் மிகவும் பிரபலமாக இருந்தன. 

இன்று உக்ரைன் ஓட்டுனர்கள் நவீன கார்களில் மர பர்னர்களையும் பாய்லர் களையும் பொருத்திக்கொள்கிறார்கள். யுஜின் செர்னிகோவ் தன்னுடைய ஓபெல் காரை இப்படி மாற்றிவிட்டார். ‘‘கார் ஓட்டுவது நாளுக்கு நாள் செலவு பிடித்த விஷயமாகிவிட்டது. அதைச் சமாளிப்பதற்குத்தான் இப்படி யோசித்தேன். நான் இயற்பியல் ஆசிரியர்.

மரத்தை எரித்து, எவ்வாறு எரிபொருளை எடுப்பது என்பதை 2 மாதங்களில் இணையத்தின்  மூலம் கற்றுக்கொண்டேன். என்னுடைய காரில் மரம் எரிக்கும் கலமும் உலோகக் கேனையும் பொருத்தி, அவற்றை கார் இன்ஜினுடன்  இணைத்துவிட்டேன்.

100 கி.மீ. தூரத்தைக் கடக்க 18 கிலோ மரத் துண்டுகள் தேவைப்படும். காஸுக்குச் செலவழிப்பதில் பாதிதான் செலவாகிறது. மணிக்கு 60 மைல் வேகத்தில் கார் பயணிக்கும். இது சுற்றுச்சூழலுக்கும் நல்லது. புகை கக்குவதில்லை.  நீராவியும் கார்பன் டையாக்ஸைடு மட்டுமே வெளியேறும்’’ என்கிறார் செர்னிகோவ்.

இவரைப்  பார்த்து ஏராளமானவர்கள் தங்கள் கார்களில் பர்னரையும் உலோகக் கலத்தையும் பொருத்திக்கொள்கிறார்கள்.







கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஃபேஸ்புக்கில் முஸ்லிம்களுக்கு எப்போதும் இடமுண்டு: ஸக்கர்பெர்க்

மத அடிப்படைத் தன்மையைத் தாண்டி அனைவரும் உலவும் இல்லமாக ஃபேஸ்புக் திகழ்கிறது, இங்கு முஸ்லிம்களுக்கு எப்போதுமே இடமுண்டு என்று ஃபேஸ்புக்   ...