செவ்வாய், 8 டிசம்பர், 2015

இஸ்லாமியர்களுக்கு எதிராக கருத்து கூறிய டொனால்டுக்கு தடை விதித்த புளோரிடா மேயர்

அமெரிக்காவில் உள்ள இஸ்லாமியர்களுக்கு எதிரான கருத்துக்களை  பரப்பி வரும் குடியரசு கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான டொனால்ட் ட்ரம்ப் அண்மையில் கூறியுள்ள சர்ச்சைக் கருத்தையடுத்து, புளோரிடா மாநில மேயர்  அவருக்கு  தடை  விதித்துள்ளார். 


இஸ்லாமியர்களுக்கு எதிரான கொள்கைகளை உடையவரான டொனால்ட் ட்ரம்ப், தான் செல்லும் இடம் எங்கும் இஸ்லாமியர்களுக்கு எதிரான கருத்துக்களை   தொடர்ந்து   பரப்பி  வருகிறார்.

பாரிஸ் தாக்குதலுக்கு பிறகு, அமெரிக்காவில் உள்ள இஸ்லாமியர்கள் ஒவ்வொருவரையும் கணக்கெடுத்து, ‘தாங்கள் இஸ்லாமியர்கள்’ என பிறருக்கு புரியும் வகையில் அடையாள அட்டை ஒன்றை எப்போதும் அணிந்திருக்க   வேண்டும்  என்று  கூறினார்.

இந்த நிலையில், அண்மையில் இஸ்லாமியர்களை அனுமதிப்பதில் உள்ள அபாயத்தைப்  பற்றி  முழுமையாக  புரிந்து கொள்ளும் வரை அமெரிக்காவில் நுழைய இஸ்லாமியர்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று  வெள்ளை  மாளிகைக்கு  கோரிக்கை  விடுத்து மீண்டும் சர்ச்சையைக் கிளப்பினார்.

 இதற்கு குடியரசு மற்றும் ஜனநாயகக் கட்சி வேட்பாளர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர். புளோரிடா மாநில மேயர் டொனால்ட்  அம்மாநிலத்திற்குள்  நுழைய தடை  விதித்துள்ளார்.

இதே போல், கடந்த திங்கள் அன்று செயிண்ட் பீட்டர்ஸ்பர்க் நகர மேயரும் அவருக்கு தடை விதித்தார். இது குறித்து அவர் ட்விட்டரில், “ ட்ரம்பின் உரைகளில்  உள்ள  அபாயத்தை  முழுமையாக  புரிந்து கொள்ளும் வரை அவர்  செயிண்ட் பீட்டர்ஸ்பர்க்  நகருக்குள்  நுழைய  தடை விதிக்கிறேன்.” என்று தெரிவித்துள்ளார்.

முன்னதாக, டொனால்டின் சர்ச்சைக் கருத்துக்கு பதிலளித்துள்ள வெள்ளை மாளிகை  செய்தி தொடர்பாளர் ஜான் எர்னஸ்ட், “ இப்போது செய்ததைத்தான், டொனால்ட் தனது  பிரச்சாரம் முழுவதும் செய்து வருகிறார். இதன் மூலமாக, மக்களின் பயத்தோடு விளையாடி, தனது பிரச்சாரத்திற்கு வலுசேர்த்து வருகிறார். மிகவும் கீழ்த்தரமான வழியில் அமெரிக்காவை பிரிக்க நினைக்கிறார். இது அமெரிக்காவின் இறையாண்மைக்கே  எதிரானதாகும்.” என்று தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஃபேஸ்புக்கில் முஸ்லிம்களுக்கு எப்போதும் இடமுண்டு: ஸக்கர்பெர்க்

மத அடிப்படைத் தன்மையைத் தாண்டி அனைவரும் உலவும் இல்லமாக ஃபேஸ்புக் திகழ்கிறது, இங்கு முஸ்லிம்களுக்கு எப்போதுமே இடமுண்டு என்று ஃபேஸ்புக்   ...