திங்கள், 7 டிசம்பர், 2015

எம்.பி. ஆக பதவியேற்று மூன்று ஆண்டுகளுக்கு பிறகு பாராளுமன்றத்தில் முதல் கேள்வியை கேட்ட சச்சின்.

கிரிக்கெட்  ஆடுகளத்தில் அதிரடியாக செயல்பட்டு எதிர் அணியினருக்கு  சிம்ம சொப்பனமாகத் திகழ்ந்தவர் சச்சின் டெண்டுல்கர். 

ஆனால், அப்படிபட்ட சச்சினுக்கு பாராளுமனறத்தில் தனது முதல் கேள்வியை கேட்பதற்கு  3  ஆண்டுகள்  தேவைபட்டுள்ளது.



கடந்த 2012-ம் ஆண்டு ஜூன் மாதம் 3-ம் தேதி சச்சின் ராஜசபா எம்.பி.யாக காங்கிரஸ் அரசால் நியமிக்கப்பட்டார். சச்சினை எம்.பி. ஆக நியமித்து அரசியல் ஆதாயம் தேட நினைப்பதாக காங்கிரஸ் மீது விமர்சனம் வைக்கப்பட்டது. அதேசமயம் நாடாளுமனறத்தில் சச்சினின் செயல்பாடு எப்படி  இருக்கும்  என்ற  எதிர்பார்ப்பும்  அதிகமாக  இருந்தது.

ஆனால்  எதிர்பார்ப்புக்கு மாறாக சச்சினின் செயல்பாடு கடும் விமர்சனத்திற்கு ஆளானது. இந்நிலையில் தன் மீது சுமத்தப்பட்ட விமர்சனங்களுக்கு பதில் சொல்லும் வகையில் எம்.பி. ஆக பதவியேற்று மூன்று ஆண்டுகளுக்கு பிறகு பாராளுமன்றத்தில் முதல் கேள்வியை கேட்டுள்ளார்  சச்சின்.

சென்னை, மும்பை, டெல்லி  ஆகிய  மூன்று  நகரங்களில் செயல்படும் புறநகர்  ரெயில்  சேவையை  மேம்படுத்துவதற்காக அவை தனிக்கோட்டமாக அறிவிக்கப்படுமா?  என்று  ரெயில்வே மந்திரியிடம் எழுத்து மூலமாக கேள்வி எழுப்பினார். 

ஆனால் அதற்கான வாய்ப்பு இல்லை ரெயில்வே அமைச்சகம் பதில் கூறிவிட்டது.



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஃபேஸ்புக்கில் முஸ்லிம்களுக்கு எப்போதும் இடமுண்டு: ஸக்கர்பெர்க்

மத அடிப்படைத் தன்மையைத் தாண்டி அனைவரும் உலவும் இல்லமாக ஃபேஸ்புக் திகழ்கிறது, இங்கு முஸ்லிம்களுக்கு எப்போதுமே இடமுண்டு என்று ஃபேஸ்புக்   ...