செவ்வாய், 3 நவம்பர், 2015

மிஸ்டுகால் மூலம் மலர்ந்த காதல்: மாணவியை பலாத்காரம் செய்த ஆசிரியர்.


மிஸ்டு கால் மூலம் ஏற்பட்ட பழக்கத்தால் பிளஸ்2 மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த ஆசிரியர் எஸ்கேப் ஆகிவிட்டார். அவரை போலீசார் தேடி வருகின்றனர்.


நெல்லை மாவட்டம் பணகுடியை அடுத்த பழவூர் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்த 17 வயது மாணவி அங்குள்ள அரசு மேல்நிலைப்பள்ளியில் பிளஸ் 2 படிக்கிறார். இவரது தந்தையின் செல்போனுக்கு கடந்த ஒரு வருடத்துக்கு முன்பு மிஸ்டு கால் அழைப்பு ஒன்று வந்தது. இதை மாணவி எடுத்து பேசினார்.

 அப்போது எதிர்முனையில் வேலூர் மாவட்டம் நெல்லிக்குளத்தை சேர்ந்த திருநாவுக்கரசு (31) என்பவர் பேசியுள்ளார். இதன்பிறகு அந்த நம்பருக்கு திருநாவுக்கரசு அடிக்கடி பேசியதாக தெரிகிறது.

இதனால் ஏற்பட்ட பழக்கம் அவர்களுக்குள் காதலாக மாறியது. பெற்றோருக்கு தெரியாமல் இருவரும் பல்வேறு இடங்களுக்கு சென்று வந்துள்ளனர். அப்போது அவர்கள் நெருக்கமாக இருந்ததாக தெரிகிறது. இந்நிலையில் திருநாவுக்கரசுக்கு திருமணம்  செய்ய  வேறு  இடத்தில் பெண் பார்த்துள்ளனர். 

இதுபற்றி மாணவிக்கு தெரியவந்ததால் அதிர்ச்சியடைந்தார். இதுபற்றி போனில் திருநாவுக்கரசிடம் பேசியபோது சரியான பதிலை தெரிவிக்கவில்லை என்று தெரிகிறது. இதனால் மாணவி, நெல்லிக்குளம் சென்று அங்கிருந்து காதலனிடம் செல்போனில் தொடர்புகொண்டு விஷயத்தை தெரிவித்துள்ளார்.

 அங்கேயே இரு கொஞ்ச நேரத்தில் வந்துவிடுகிறேன் என்று கூறிய திருநாவுக்கரசு,  நீண்ட நேரமாகியும் வரவில்லை. இதனால் மாணவி, மீண்டும் அவரது செல்போனில் தொடர்பு கொண்ட போது சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தது.

  இதனால் மாணவி அதிர்ச்சியடைந்தார். இதுகுறித்து மாணவி போலீசில் புகார் செய்தார். மாணவியிடம் விசாரணை நடத்திய  போலீசார், அவரது பெற்றோரை வரவழைத்து அவருடன் மாணவியை அனுப்பி வைத்தனர்.


இதனிடையே வள்ளியூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு பெற்றோருடன்  சென்ற மாணவி, திருநாவுக்கரசு மீது புகார் கொடுத்தார். அதில், ‘’ தன்னை ஏமாற்றி பாலியல் தொல்லை கொடுத்ததாகவும், திருநாவுக்கரசு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றும் கூறியுள்ளார்.

 இதன்படி போலீசார் வழக்குப்பதிவு செய்து திருநாவுக்கரசை தேடி வருகின்றனர். ஆசிரியர் பயிற்சி முடித்துள்ள திருநாவுக்கரசுக்கு சமீபத்தில்தான் வேலூரில் உள்ள அரசு பள்ளியில் வேலை கிடைத்துள்ளது. மாணவியை ஆசிரியரே பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

ஃபேஸ்புக்கில் முஸ்லிம்களுக்கு எப்போதும் இடமுண்டு: ஸக்கர்பெர்க்

மத அடிப்படைத் தன்மையைத் தாண்டி அனைவரும் உலவும் இல்லமாக ஃபேஸ்புக் திகழ்கிறது, இங்கு முஸ்லிம்களுக்கு எப்போதுமே இடமுண்டு என்று ஃபேஸ்புக்   ...